விஜயை விமர்சித்த நடிகையின் அனலி பட ரிசல்ட்? | சூரி படத்தின் பட்ஜெட் 75 கோடியா? | பத்து கோடியை தொட்ட சிறை | ஜனநாயகன் டிக்கெட் புக்கிங் எப்போது தெரியுமா? | ரஜினியை இயக்கும் ‛டான்' இயக்குனர் : 2027 பொங்கலுக்கு ரிலீஸ் | 'ஜனநாயகன்' டிரைலர் : எதிர்பார்ப்புகள் என்ன ? | தமிழில் முதல் வெற்றியைப் பெறுவாரா பூஜா ஹெக்டே ? | இன்று ஒரே நாளில் மூன்று முக்கிய வெளியீடுகள் | சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் |

ரஜினியின் 'பேட்ட' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன். தொடர்ந்து 'மாஸ்டர்', 'மாறன்' ஆகிய படங்களில் நடித்தார். தற்போது விக்ரம் உடன் தங்கலான் படத்தில் நடித்துள்ளார். பொங்கலுக்கு இந்தபடம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாளவிகா மோகனன் தன் தனித்துவமான அடையாளத்தை திரையில் மட்டும் வெளிப்படுத்தாமல் கவர்ச்சி போட்டோ ஷூட் மூலம் சமூகவலைதள பக்கங்களிலும் காண்பித்து தன் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். சமீபத்தில் ஒரு குளத்தில் வெள்ளை நிற ஆடையில் போட்டோ ஷூட் வெளியிட்டுள்ளார்.
அதன் உடன், ‛‛எளிமையான, தூய்மையான நேரம். காதல் சிந்தனையோ? நான் எப்போதும் இயற்கைக்காட்சியின் மீது ஒரு ஈர்ப்பைக் கொண்டிருப்பேன். எல்லாம் எளிமையாகவும் தூய்மையாகவும் இருந்த காலம். ஆடைகள், ஆபரணங்கள், இரைச்சல் ஆகியவற்றிலிருந்து விலகி வெறும் தண்ணீர் மற்றும் வெள்ளை நிறத்துடன்...'' என பதிவிட்டுள்ளார்.