சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க போகிறார். சூர்யாவின் 43வது படமாக உருவாகும் இதில் நாயகியாக நஸ்ரியா நடிக்கிறார். முக்கிய வேடங்களில் துல்கர் சல்மான், விஜய் வர்மா நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இது ஜிவியின் 100வது படமாகும். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. சூரரைப்போற்று படத்திற்கு பின் சூர்யா, சுதா, ஜிவி பிரகாஷ் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படம் இதுவாகும்.

இப்படம் பற்றிய அறிவிப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் மாணவர்கள் போராட்டம், போலீசார் அவர்களை அடக்குவது, துப்பாக்கிச்சூடு போன்ற குறியீடுகள் இடம் பெற்றுள்ளன. மேலும் புறநானுறு என குறிப்பிட்டு மேலே இரண்டு விஷயங்களை லேபிள் போட்டு மறைத்துள்ளனர்.
1965ல் தமிழகத்தில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை தழுவி இந்த படம் உருவாக போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரசிகர்களும் அவ்வாறே கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். படம் முழுக்க இந்த விஷயம் வரப்போகிறதா அல்லது அதை மையமாக வைத்து நடப்புகால அரசியல் சம்பவங்களையும் வைத்து இந்த படம் உருவாக போகிறதா என அடுத்தடுத்த அப்டேட்டுகளில் தெரிய வரும்.