தனுஷ் பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த மரியாதை | கவுதம் ராம் கார்த்திக்கின் ‛ரூட்' படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது! | சத்ய சாய் பாபா படத்தை இயக்கும் சுரேஷ் கிருஷ்ணா! | 'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூர் முதல் பார்வை வெளியானது! | ‛மேயாத மான்' ரத்னகுமார் படத்தை தயாரிக்கும் இயக்குனர்கள்! | வாரிசு பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடந்த ட்விஸ்ட்! | கமல் பிறந்தநாளில் ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! | டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா? விளக்குகிறார் ஷ்யாம் குமார் | பீதியில் புரோட்டா காமெடியன் | 'டீசலுக்கு' வரவேற்பு உண்டு வருவாய் இல்லை: இயக்குனர் சண்முகம் |

தமிழ் சினிமா வரலாற்றில் 100 கோடி வசூல் என்பதை முதன் முதலில் ஆரம்பித்து வைத்த படம் ரஜினிகாந்த் நடித்து 2007ல் வெளிவந்த 'சிவாஜி'. அதன்பின் சுமார் 40 படங்கள் 100 கோடி வசூலைத் தொட்டுள்ளன.
இப்போது 100 கோடி வசூல் என்பதை விடவும் 400 கோடி, 500 கோடி வசூல் என்பதுதான் வசூலில் மைல்கல்லாக மாறிவிட்டது. கடந்த சில வருடங்களில் 400 கோடி வசூல் என்பது குறிப்பிடும்படி நடந்துள்ளது.
தமிழ் சினிமாவில் முதன் முதலில் 500 கோடி வசூல் என்பதையும் ஆரம்பித்து வைத்தவர் ரஜினிகாந்த். அவரது நடிப்பில் வெளிவந்த '2.0' படம் 600 கோடிக்கும் அதிகமான வசூலைக் கடந்த ஒரே தமிழ்ப் படம். அந்த வசூலை இதுவரை எந்த ஒரு தமிழ்ப் படமும் முறியடிக்கவில்லை.
2002ல் வெளிவந்த 'பொன்னியின் செல்வன்' முதல் பாகம் 500 கோடி வசூலைக் கடந்தது. கமல்ஹாசன் நடித்து வெளிவந்த 'விக்ரம்' படம் 400 கோடி வசூலைக் கடந்தது. இந்த வருடம் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 'ஜெயிலர்' படம் 550 கோடியை கடந்த நிலையில் தற்போது விஜய் நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'லியோ' படமும் 400 கோடி வசூலைக் கடந்துள்ளது.
100 ஆண்டு தமிழ் சினிமா வரலாற்றில் “2.0, பொன்னியின் செல்வன் 1, விக்ரம், ஜெயிலர், லியோ' ஆகிய 5 படங்கள் 400 கோடி வசூலைக் கடந்துள்ளன. இதில் 'லியோ' படம் 500 கோடி வசூலைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. '2.0' வசூலான 600 கோடி வசூலையும் கடக்குமா என்பது போகப் போகத்தான் தெரியும்.