ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள 'லியோ' படம் அமெரிக்காவில் மொத்தமாக 1000 இடங்களில் வெளியாக உள்ளது. இப்படத்திற்கான பிரிமியர் காட்சிகள் அக்டோபர் 18ம் தேதியன்றே நடக்கிறது. அதற்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில் தற்போது முன்பதிவில் மட்டுமே ஒரு மில்லியன் யுஎஸ் டாலர் வசூலைப் பெற்று புதிய சாதனையைப் படைத்துள்ளது. இதற்கு முன்பாக, 'கபாலி, பொன்னியின் செல்வன் 1' ஆகிய படங்கள் இப்படி முன்பதிவில் ஒரு மில்லியன் யுஎஸ் டாலரை வசூலித்துள்ளது. தெலுங்குப் படமான 'ஆர்ஆர்ஆர்' படத்திற்குப் பிறகு ஒரு இந்தியத் திரைப்படம் இந்த சாதனையை இப்போதுதான் புரிகிறது. இதனால், 'லியோ' படம் அமெரிக்க வசூலில் புதிய சாதனையைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் மட்டுமல்லாது தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகள் பலவற்றிலும் படத்திற்கான முன்பதிவு முந்தைய தமிழ்ப் படங்களைக் காட்டிலும் அதிகமாக உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.