லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து வெளிவந்த விடுதலை படத்தின் வெற்றிக்குப் பிறகு தற்போது, துரை செந்தில்குமார் இயக்கத்தில் 'கருடன்' என்கிற முழு நீள ஆக்ஷன் படத்தில் நடித்து வருகிறார். வெற்றிமாறன் கதையில் இந்த படம் உருவாகிறது. இதன் படப்பிடிப்பு கும்பகோணம், தேனி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் சசிகுமார், சமுத்திரக்கனி, உன்னி முகுந்தன், ரேவதி ஷர்மா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது அதன்படி, இந்த படம் ரூ. 40 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது என்கிறார்கள். இது ஜெயம் ரவி, விஷால், ஆர்யா, கார்த்தி போன்ற நடிகர்களின் படத்திற்கு இணையான பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது.