குட் பேட் அக்லி டிரைலர் எப்போது? | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
விஜய் நடித்துள்ள 'லியோ' படம் அக்டோபர் 19ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. வெளிநாடுகளில் இப்படத்திற்கான முன்பதிவு ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
அமெரிக்காவில் மட்டும் 999 தியேட்டர்களில் இப்படத்தை வெளியிட உள்ளதாக படத்தை அங்கு வெளியிடும் வினியோக நிறுவனம் அறிவித்துள்ளது. இதுவரையில் வேறு எந்த ஒரு தமிழ்ப் படமும் இவ்வளவு தியேட்டர்களில் திரையிடப்பட்டதில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
படம் வெளியாக இன்னும் ஏழு நாட்கள் உள்ள நிலையில் அங்கும் 7 லட்சம் யுஎஸ் டாலர்களுக்கும் அதிகமான தொகையை முன்பதிவு மூலம் மட்டுமே வசூலித்துள்ளது. இது இன்னும் அதிகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யுகே-வில் 55 ஆயிரத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாம். மற்ற நாடுகள் சிலவற்றிலும் எதிர்பார்த்ததை விடவும் முன்பதிவு சிறப்பாக நடப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.