ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் திரைப்படம் 'லியோ'. த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் டத், மிஷ்கின், கவுதம் மேனன், ப்ரியா ஆனந்த், மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் டிரைலர் வெளியாகி பாராட்டைப் பெற்ற அளவிற்கு ஈடாக சர்ச்சைகளையும் சந்தித்து விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இத்திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ம் தேதி அன்று வெளியாகுவதால் இதற்காக லோகேஷ் தற்போது இன்டர்வியூ அளித்து வருகிறார். அவர் கூறியதாவது, "இன்னும் லியோ படத்திலிருந்து 3 பாடல்கள் வெளியாகவுள்ளது. இதில் எந்த பாடல் வருகின்ற திங்கட்கிழமை அன்று வெளியாகும் என்பது எனக்கு தெரியவில்லை. இந்த படத்தில் 'ஐ எம் ஸ்ட்ரிக்ட்' என இங்கிலீஷ் பாடல் இடம்பெற்றுள்ளது இது எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது அல்லாமல் ஒரு ரொமான்டிக் பாடல் உள்ளது. "என இவ்வாறு தெரிவித்துள்ளார்.