32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
மலேசியாவில் புகழ்பெற்ற ரேடியோ ஜாக்கியாக இருப்பவர் புன்னகை பூ கீதா. 'அறிந்தும் அறியாமலும்' படத்தை தயாரித்து அதன் மூலம் தயாரிப்பாளராக தமிழ் சினிமாவுக்குள் வந்தார். அதன் பிறகு குண்டக்க மண்டக்க, பட்டியல், ஒரு நடிகையின் வாக்குமூலம், நர்த்தகி, காவல், மைதான், சிவப்பு, சங்கு சக்கரம், நானும் சிங்கிள்தான் படங்களை தயாரித்தார். அவர் தயாரித்த குண்டக்க மண்டக்க, சிவப்பு, நானும் சிங்கிள்தான் தவிர மற்ற படங்களில் நடிக்கவும் செய்தார்.
சில காலம் சினிமாவை விட்டு விலகி இருந்தவர் தற்போது 'சில நொடிகளில்' என்ற படத்தின் மூலம் மீண்டும் தயாரிப்பாளராக, நடிகையாக திரும்பி வந்திருக்கிறார். பரத்வாஜ் என்பவர் இயக்கி உள்ளார். இதில் கீதாவுடன் ரிச்சர்ட் ரிஷி, யாஷிகா ஆனந்த் ஆகியோரும் நடித்துள்ளனர்.
லண்டனில் வசிக்கும் திருமணமான தம்பதியைப் பற்றிய திகில் கதையாக இந்த படம் உருவாகி உள்ளது. இந்தப் படத்தின் ஷூட்டிங் முழுக்க லண்டனில் நடந்துள்ளது. அபிமன்யு சதானந்தன் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். பாடல்களுக்கு மசாலா காபி, ஸ்டாகாட்டோ மியூசிக் பேண்ட், ஜார்ன் சுர்ராவ், தர்ஷனா கே.டி, ரோஹித் மாட் ஆகியோர் இசை அமைத்துள்ளனர். பாலிவுட் இசை அமைப்பாளர் ரோஹித் குல்கர்னி பின்னணி இசை அமைத்துள்ளார்.