பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
காவிரி நதிநீரை தமிழகத்திற்குத் திறந்துவிடுவதற்கு கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகிறது. அது மட்டுமல்ல, அங்கு நடக்கும் போராட்டங்களையும் அடக்க மாட்டோம் என சொல்கிறது. காவிரிக்கான ஆதரவு போராட்டமாக நடத்தாமல் தமிழர்களுக்கும், தமிழகத்திற்கும் எதிரான ஒரு போராட்டத்தை அங்குள்ள கன்னட அமைப்புகள் செய்து வருகின்றன.
இரண்டு தினங்களுக்கு முன்பு அங்கு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய தமிழ் நடிகர் சித்தார்த்தை அரங்கை விட்டு வெளியேற வைத்திருக்கிறார்கள் கன்னட அமைப்பினர். அதற்கு 'ஜெயிலர்' படத்தில் நடித்த கன்னட நடிகரான சிவராஜ்குமார், தமிழில் பல படங்களில் நடித்த கன்னட நடிகரான பிரகாஷ்ராஜும் மன்னிப்பு கேட்டுள்ளார்கள்.
சித்தார்த் வெளியேற்றப்பட்டது குறித்து இங்குள்ள நடிகர் சங்கமோ, தயாரிப்பாளர் சங்கமோ கண்டன அறிக்கை கூட வெளியிடவில்லை. ரஜினிகாந்த் கூட 'சந்திரமுகி 2' படத்திற்கு அறிக்கை வெளியிட்டாரே தவிர காவிரிக்காக எந்த அறிக்கையும் விடவில்லை. இது குறித்து சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள் பரவி வருகிறது.
காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவாக ரஜினிகாந்த் குரல் கொடுக்க வேண்டும் என அங்குள்ள கன்னட அமைப்பினர் பேசி வருகிறார்கள். இந்நிலையில் கன்னட திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் தமிழகத்திற்குத் தண்ணீர் திறப்பதை எதிர்த்து போராட்டங்களில் பங்கேற்று வருகிறார்கள்.
ஆனால், இங்கு தமிழ் நடிகர்கள் யாரும் காவிரிக்காக, தமிழகத்திற்காகத் தங்களது ஆதரவுக் குரலை பதிவு செய்யவேல்லை. சினிமாவில் மட்டும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், விவசாயத்தைக் காப்போம் எனவும் வீர வசனம் பேசுபவர்கள் காவிரியை நம்பி விவசாயம் செய்யும் தமிழக விவசாயிகளுக்காக குரல் கொடுக்கவேயில்லை.
அப்படி குரல் கொடுத்தால் கர்நாடகாவில் அவர்கள் படங்களைத் திரையிட முடியாது என்பதே அதற்குக் காரணம். சுயநலமாக சிந்திப்பதால் அவர்கள் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்காமல் இருப்பதாக தமிழ் சினிமா ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள்.
சமீபத்தில் வெளிவந்த ரஜினிகாந்த்தின் 'ஜெயிலர்' படம் கர்நாடகாவில் மட்டும் 75 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. மற்ற முன்னணி நடிகர்களின் படங்களும் அங்கு அதிகமான தியேட்டர்களில் வெளியாகும். தமிழகம் தாண்டி கர்நாடகாவில்தான் தமிழ் நடிகர்களின் படங்கள் அதிக வசூலைப் பெறும். அடுத்த மாதம் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள 'லியோ' படம் 'ஜெயிலர்' வசூலை முறியடித்து 100 கோடி வசூலிக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளார்கள். எனவே, தமிழ் நடிகர்கள் யாரும் இப்போதைக்கு காவிரி விவகாரம் குறித்து வாய் திறந்து எதையும் பேச மாட்டார்கள் என்பதே தமிழ்த் திரையுலகத்தின் பேச்சாக உள்ளது.