ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

அட்லீ இயக்கத்தில், ஷாரூக்கான், நயன்தாரா மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த ஹிந்திப் படமான 'ஜவான்' படம் 1000 கோடி வசூலைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது.
அப்படத்தைப் பாராட்டி பல சினிமா பிரபலங்கள் அப்போதே டுவீட் செய்திருந்தனர். இந்நிலையில் சற்று முன் ஷாரூக்கானுக்கு வாழ்த்து தெரிவித்து விஜய் டுவீட் போட்டுள்ளார். அதில், “பிளாக்பஸ்டர் வெற்றிக்கு வாழ்த்துகள், ஷாரூக்கான், அட்லீ, மற்றும் மொத்த படக்குழுவுக்கு… லவ் யு டூ ஷாரூக் சார்,” என விஜய் வாழ்த்தியுள்ளார்.
இரண்டு தினங்களுக்கு முன்பு ஷாரூக் டுவிட்டரில் நடத்திய 'சாட்'டில் விஜய் ரசிகர்களின் சோஷியல் மீடியா கணக்கு ஒன்றின் பதிவுக்கு பதிலளித்த ஷாரூக் டுவீட்டிற்கான பதிலாக தனது வாழ்த்தைப் பதிவு செய்துள்ளார் விஜய்.
'லியோ' படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து குறித்து சர்ச்சைகள் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் அது பற்றி எதுவும் சொல்லாமல் 'ஜவான்' படத்திற்கு விஜய் வாழ்த்து தெரிவித்திருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.