லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
பி.வாசு இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில், ராகவா லாரன்ஸ், கங்கனா ரணவத், வடிவேலு மற்றும் பலர் நடிக்கும் 'சந்திரமுகி 2' படம் இந்த வாரம் செப்டம்பர் 28ம் தேதி வெளியாக உள்ளது. 2005ல் வெளிவந்த இப்படத்தின் முதல் பாகத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்திருந்தார். அவர் நடித்த ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தில் ரஜினியின் தீவிர ரசிகரான ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். அந்தப் பெருமையைப் பற்றி அடிக்கடி பேசி வந்தார் ராகவா.
இந்நிலையில் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து பட வெற்றிக்காக அவர் ஆசி பெற்றுள்ளார். இது குறித்து, “என்னுடைய தலைவர் மற்றும் குரு ரஜினிகாந்தை சந்தித்தேன். ஜெயிலர் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு வாழ்த்து சொல்லி, செப்டம்பர் 28 வெளியாக உள்ள 'சந்திரமுகி 2' படத்திற்கும் ஆசீர்வாதம் வாங்கினேன். எனக்கு மிக்க மகிழ்ச்சி. தலைவர் எப்போதும் சிறந்தவர், குருவே சரணம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.