Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சித்தா படத்தின் டிரைலரை வெளியிடும் சூர்யா!

24 செப், 2023 - 01:30 IST
எழுத்தின் அளவு:
Suriya-releasing-the-trailer-of-Chithha!


பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் தயாரித்து நடித்துள்ள திரைப்படம் 'சித்தா'. நிமிஷா சஜயன் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கான பாடல்களை திபு நினன் தாமஸ், பின்னணி இசை விஷால் சந்திரசேகர் என இருவரும் இசையமைத்துள்ளனர். செப்டம்பர் 28ம் தேதி அன்று இப்படத்தை தமிழகமெங்கும் ரெட் ஜெயண்ட் வெளியிடுகிறது.

ஏற்கனவே இந்த படத்திலிருந்து வெளிவந்த டீசர், பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது தொடர்ந்து, இந்த படத்தை பார்த்த விநியோகஸ்தர்கள் படம் நன்றாக உள்ளதாக தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை 7 மணிக்கு நடிகர் சூர்யா அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடுவதாக படக்குழுவினர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ராஷ்மிகா மந்தனாவின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட அனிமல் படக்குழுவினர்!ராஷ்மிகா மந்தனாவின் பர்ஸ்ட் லுக்கை ... வெப் தொடர் இயக்கும் ஸ்ரீ கணேஷ்! வெப் தொடர் இயக்கும் ஸ்ரீ கணேஷ்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)