நாக சைதன்யாவின் புதிய பட டைட்டிலை அறிவித்த மகேஷ்பாபு | இ.வி.கணேஷ்பாபுவின் 'ஆநிரை' குறும்படத்திற்கு கோவா திரைப்பட விழாவில் பாராட்டு | பிரித்விராஜ் படத்தை ஓவர்டேக் செய்யும் சிறிய நடிகரின் படம் | சிறையில் இருக்கும் நிலையில் நடிகர் தர்ஷினின் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | கில்லி பாணியில் அடுத்த படத்தை இயக்கும் கீர்த்தீஸ்வரன் | 'திரெளபதி 2' படத்தில் ரக்ஷனாவின் பர்ஸ்ட் லுக் வெளியீடு | ஜிம்மில் பீஸ்ட் மோடில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா | நடிகர் அஜித்துக்கு 'ஜென்டில்மேன் டிரைவர்' விருது | பிப்ரவரியில் அஜித் படம் தொடங்குகிறது : ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன புது தகவல் | நீங்க ஹீரோ ஆக வேணாம்னு சொன்னாரு : பார்க்கிங் தயாரிப்பாளரை கலாய்த்த சிவகார்த்திகேயன் |

கமல்ஹாசனின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவர் சிங்கீதம் சீனிவாச ராவ். 1972ம் ஆண்டு வெளிவந்த 'நீதி - நிஜயதி' என்ற தெலுங்குப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கில் படங்களை இயக்கி வந்த அவரை தனது 100வது படமான 'ராஜ பார்வை' படத்தின் மூலம் தமிழுக்குக் கொண்டு வந்தார் கமல்ஹாசன்.
அதன்பின் கமல்ஹாசன் நடித்த “அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதனகாமராஜன், மகளிர் மட்டும், காதலா காதலா, மும்பை எக்ஸ்பிரஸ்,' ஆகிய படங்களை இயக்கினார். அப்படங்கள் தவிர பிரபு நடித்த 'சின்ன வாத்தியார்,' ஜோதிகா நடித்த 'லிட்டில் ஜான்' ஆகிய இரண்டு தமிழ்ப் படங்களை மட்டுமே இயக்கியுள்ளார்.
தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி என 50க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய சிங்கீதம் சீனிவாச ராவ், 2013ல் வெளிவந்த 'வெல்கம் ஒபாமா' என்ற படத்தைக் கடைசியாக இயக்கினார். கடந்த 10 ஆண்டுகளாக ஓய்வில் இருக்கும் சிங்கீதம் சீனிவாச ராவ் இன்று தன்னுடைய 93வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
அவருக்கு நடிகர் கமல்ஹாசன், “மிக மூத்த இயக்குநராக இருக்கலாம், ஆனாலும் என் மனதில் துறுதுறுத்த இளைஞராகவே பதிந்திருப்பவர் திரு. சிங்கிதம் சீனிவாசராவ்காரு. அபூர்வ சகோதரர்கள், பேசும் படம், மைக்கேல் மதன காமராஜன் கால சந்தோஷத் தருணங்கள் எனக்குள் இப்போதும் குமிழியிடுகின்றன. மாயாபஜார் காலம் தொடங்கி, என் மும்பை எக்ஸ்பிரஸ்ஸில் தொடர்ந்து இன்னமும் உற்சாகத்தோடு வளையவரும் சீனிவாசராவ்-க்கு என் மனமகிழ்ந்த பிறந்தநாள் வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என பிறந்தநாள் வாழ்த்தைத் தெரிவித்துள்ளார்.