கர்நாடக முதல்வரை சந்தித்த ராம்சரண் | ஜூனியர் என்டிஆர், பிரசாந்த் நீல் படத்தில் ருக்மணி வசந்த் : ரகசியம் உடைத்த மதராஸி தயாரிப்பாளர் | மருமகனுக்காக படம் தயாரிக்கும் விஜய் ஆண்டனி | ரஜினியே ரத்தத்தை நம்பி தான் படம் எடுக்கிறார் : ராதாரவி பேச்சு | இந்து தர்மத்தை சினிமாவில் சொல்வதை நினைத்து பெருமைப்படுகிறேன் : ‛ஹனுமன்' ஹீரோ | பார்வையாளர்களின் பதிலை மட்டுமே மதிக்கிறேன் : பல்லவி ஜோஷி | 100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? |
மாஸ்டர் படத்தை அடுத்து விஜய்யும், லோகேஷ் கனகராஜூம் இணைந்துள்ள படம் லியோ. திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன் என பலர் முக்கிய வேடங்களில் நடிக்க, அனிருத் இசை அமைத்திருக்கிறார். அக்டோபர் மாதம் 19ம் தேதி படம் திரைக்கு வரவுள்ள நிலையில், தற்போது புரொமோஷனை தொடங்கி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அதையடுத்து விஜய்யின் பிறமொழி தொடர்பான போஸ்டர்கள் வெளியாகி உள்ளன.
அவற்றில் ஒரு போஸ்டர் கோல்ட் பர்செட் என்ற ஆங்கில் படத்தில் இருந்தும், இன்னொரு போஸ்டர் ஆயுதம் என்ற படத்தின் போஸ்டரையும் காப்பி அடித்து வடிவமைக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் சமூகவலைதளத்தில் பதிவிட்டு ட்ரோல் செய்து வருகிறார்கள். அதோடு காப்பி விவகாரத்தில் ஏ.ஆர்.முருகதாஸ், அட்லியை லோகேஷ் கனகராஜ் மிஞ்சி விடுவார் போலிருக்கே என்றும் விமர்சித்து வருகிறார்கள்.