பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
அட்லீ இயக்கத்தில், ஷாரூக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடித்து இந்த மாதம் 7ம் தேதி வெளியான படம் 'ஜவான்'. ஹிந்தி, தமிழ், தெலுங்கில் வெளியான இந்தப் படம் முந்தைய வசூல் சாதனைகளை முறியடித்து புதிய சாதனையைப் படைத்துள்ளது.
படம் வெளியான இந்த இரண்டு வாரங்களில் இப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.500 கோடி வசூலைக் கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உலக அளவில் ரூ.907 கோடியைக் கடந்துள்ளது. விரைவில் இந்தத் தொகை ரூ.1000 கோடியைக் கடக்கவும் வாய்ப்புண்டு.
அப்படி நடந்தால் ஒரே ஆண்டில் 'பதான்', 'ஜவான்' படங்களின் மூலம் 1000 கோடி வசூல் சாதனையைப் படைத்த ஒரே கதாநாயகன் என்ற பெருமையைப் பெறுவார் ஷாரூக்கான். அப்படத்தில் நடித்த தமிழ் நட்சத்திரங்களான நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகியோருக்கு ஹிந்தியில் பல வாய்ப்புகள் தேடி வருவதாகத் தகவல்.