நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
ஆதி போட்டோஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கும் படம் 'உலகநாதன்'. ஏ.ஆதவன் படத்தை இயக்கி உள்ளார். அட்சயன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கஞ்சா கருப்பு நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கிறார். அட்சயனுக்கு ஜோடியாக யோகதர்சினி, கிரேட்டா இரண்டு புதுமுக நாயகிகள் நடித்திருக்கிறார்கள். சார்லஸ் தனா இசை அமைத்திருக்கிறார், கணேஷ் சாய் பிரசாத் ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி இயக்குனர் ஆதவன் கூறும்போது “கிராமிய கதையமைப்போடு காதலும், மோதலும் சென்டிமென்ட்டும் கலந்த பேமிலி படமாக உருவாக்கியிருக்கிறோம். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் மதுரை, மற்றும் ராஜபாளையத்தைச் சுற்றியுள்ள அழகான பகுதிகளில் நடந்திருக்கிறது. கதாநாயகன் சிலம்பம் பயிற்சி முழுமையாக பெற்றவர் என்பதால் சிலம்பம் இடம்பெறும் சண்டை காட்சிகளை டூப் இல்லாமல் எடுத்திருக்கிறோம். இன்றைக்கு இருக்கிற கிராமத்து காதலையும், மோதலையும் யதார்த்தமாக சொல்லும் படமாக உருவாகி உள்ளது. என்றார்.