சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

'ஜவான்' படத்தின் மூலம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளார் அட்லீ. தமிழில் விஜய் நடித்த மூன்று படங்களை அடுத்தடுத்து இயக்கியவர் ஹிந்தியில் ஷாரூக்கான் நடிக்க 'ஜவான்' படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்த போது பலரும் ஆச்சரியப்பட்டார்கள். அந்த ஆச்சரியம் பெரும் வெற்றிக்குப் பிறகு மேலும் அதிகரித்துள்ளது.
இந்திய அளவில் பல சினிமா பிரபலங்கள் 'ஜவான்' கூட்டணியை வாழ்த்தி வருகிறார்கள். அவர்களில் தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுனும் ஒருவர். ஷாரூக், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, அட்லீ, அனிருத் என ஒவ்வொருவரையும் தனித் தனியாகக் குறிப்பிட்டு நீளமான பதிவொன்றை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதற்கு நன்றி தெரிவித்த அனிருத், 'நன்றி எனது சகோதரரே” என்றார். அதற்கு அல்லு அர்ஜுன், “வெறும் நன்றி மட்டும் சொல்லக் கூடாது, எனக்கு சிறந்த பாடல்களும் வேண்டும்,” என்று பதிலளித்தார். அதற்கு 'ரெடி' என அனிருத் கூறியுள்ளார்.
இந்த உரையாடல் மூலம் 'புஷ்பா 2' படத்திற்குப் பிறகு அல்லு அர்ஜுன் நடிக்க உள்ள படத்தை அட்லீ தான் இயக்க உள்ளார். அதற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். அதனால், 'அ-அ-அ' கூட்டணி, அதாவது அல்லு அர்ஜுன், அட்லீ, அனிருத் கூட்டணி உருவாக உள்ளது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.