போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் | 'அமரன்' வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வாரா 'மதராஸி' ? | ரிலீஸ் தேதி குழப்பத்தில் 'கருப்பு' : காத்திருக்கும் ரசிகர்கள் | பிளாஷ்பேக் : சூப்பர் ஸ்டாருக்கு பெயர் சூட்டிய சூப்பர் ஸ்டார் | பிளாஷ்பேக் : பாரதிராஜா இயக்கதில் நடிக்க மறுத்த சன்னி தியோல் | பாரிஜாதம் : புதிய தொடரில் ஆலியா மானசா |
தமிழில் சிம்பு நடித்த ‛குத்து' படத்தில் அறிமுகமானவர் ரம்யா(40). அப்போது முதல் ‛குத்து' ரம்யா என அழைப்பட்ட இவர் திவ்யா ஸ்பந்தனா என்ற பெயரிலும் படங்களில் நடித்து வந்தார். தமிழில் பொல்லாதவன், வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கன்னடம், தெலுங்கு மொழியிலும் நடித்தார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியலில் பயணித்தவர் எம்பி.யாகவும் பதவி வகித்தார். சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கியவர் சமீபத்தில் தான் பட தயாரிப்பு மூலம் மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்தார்.
இந்நிலையில் திடீர் மாரடைப்பு காரணமாக திவ்யா இறந்துவிட்டதாக சமூகவலைதளங்களில் றெக்க கட்டி செய்திகள் பரவின. பின்னர் அந்த செய்தி உண்மையல்ல, வதந்தி என தெரியவந்தது. ஜெனீவா நகரில் பெண் ஒருவர் உடன் ரெசார்ட்டில் திவ்யா உணவு அருந்தும் போட்டோவை அந்த பெண் வெளியிட்டு திவ்யா நலமாக இருக்கிறார், தயவு செய்து தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டார். மேலும் அவர் நாளை(செப்., 7) பெங்களூரு திரும்ப உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.