‛ஜனநாயகன்' படத்திற்கு செக் வைக்க வரும் ‛பராசக்தி' | கமல் படத்தில் இணைந்த பிரபல மலையாள எழுத்தாளர் | வட சென்னை பெண்ணாக சாய் பல்லவி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் காஞ்சனா 4 | அறிவிக்கப்பட்டவை 10... வந்தவை 7 : இன்றைய நிலவரம் | ஓடாமல் போன 'காட்டி' : அனுஷ்காவின் திடீர் முடிவு | இரண்டாவது வாரத்தில் 'மதராஸி', லாபம் கிடைக்குமா ? | 11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நஸ்ரியா | ஹவுஸ்புல் ஆகும் ஜப்பானியத் திரைப்படம் | கார்மேனி செல்வத்தின் கதை என்ன? |
தமிழில் சிவா இயக்கத்தில் அஜித் குமார் நடித்த வேதாளம் படத்தை தெலுங்கில் ‛போலா சங்கர்' என்ற பெயரில் ரீமேக் செய்தார்கள். அஜித் நடித்த வேடத்தில் சிரஞ்சீவி நடிக்க, அவருக்கு ஜோடியாக தமன்னாவும், தங்கையாக கீர்த்தி சுரேசும் நடித்தனர். ஆனால் இந்த படம் தெலுங்கில் படுதோல்வி அடைந்தது. அதையடுத்து ஹிந்தியில் வெளியிடுவதற்கு தியேட்டர்கள் புக் பண்ணி வைத்திருந்தார்கள். ஆனால் தெலுங்கில் தோல்வியடைந்ததால் இப்படத்தை திட்டமிட்டபடி ஹிந்தி ரிலீஸ் செய்வதை நிறுத்தி வைத்துள்ளார்கள். இதுகுறித்து இப்படத்தின் இயக்குனர் மெஹர் ரமேஷ் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், போலா சங்கர் வெற்றி பெறாததால் திட்டமிட்டபடி படத்தை ஹிந்தியில் வெளியிட முடியவில்லை. என்றாலும் விரைவில் ஹிந்தியில் ரிலீஸ் செய்வதற்கான ஏற்பாடுகளை ஆர்கேடி ஸ்டுடியோஸ் நிறுவனம் செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.