அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
90-கள் காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வலம் வந்தார் நடிகர் அப்பாஸ். அதன்பின் சரிவர படவாய்ப்புகள் கிடைக்காததால் வெளிநாட்டிற்கு குடும்பத்துடன் சென்று செட்டிலானார். அங்கே பெட்ரோல் பங்க் வேலை, மெக்கானிக் என வேலை கிடைக்கும் வேலையை செய்து வருகிறார். இந்த செய்தியானது சோஷியல் மீடியாக்களில் பரவ பலரும் அப்பாஸின் தற்போது நிலையை கண்டு வருத்தமடைந்தனர். அவருக்கு ஒரு கம்பேக் கிடைக்கக் கூடாதா? என்று கூட கடவுளை பிரார்த்தித்தனர்.
இந்நிலையில், அப்பாஸ் தற்போது விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். இது தொடர்பான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் அப்பாஸை 90களின் கனவு நாயகன் என பெருமைபடுத்தி அழைக்கின்றனர். மேடைக்கு வந்த அப்பாஸ் மாகாபாவுடன் கலாட்டா, சிறுமியுடன் குத்தாட்டம் என எனர்ஜிடிக்காக இருப்பதை பார்த்து ரசிகர்களும் உற்சாகத்துடன் அந்த எபிசோடை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.