மருமகனுக்காக படம் தயாரிக்கும் விஜய் ஆண்டனி | ரஜினியே ரத்தத்தை நம்பி தான் படம் எடுக்கிறார் : ராதாரவி பேச்சு | இந்து தர்மத்தை சினிமாவில் சொல்வதை நினைத்து பெருமைப்படுகிறேன் : ‛ஹனுமன்' ஹீரோ | பார்வையாளர்களின் பதிலை மட்டுமே மதிக்கிறேன் : பல்லவி ஜோஷி | 100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? |
பழம்பெரும் நடிகர் சி.எல்.ஆனந்தனின் மகள் டிஸ்கோ சாந்தி. குடும்ப சூழ்நிலை காரணமாக 1980களில் சினிமாவிற்கு கவர்ச்சி ஆட்டம் ஆட வந்தார். அப்போது டிஸ்கோ நடனம் திரைப்படங்களில் பிரபலமாக இருந்தது. அந்த நடனத்தை ஆடியதால் டிஸ்கோ சாந்தி என்று அழைக்கப்பட்டார். அதன்பிறகு தென்னிந்திய மொழிகளில் ஏராளமான படங்களில் ஆடினார்.தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு ஐதராபாத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். 10 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீஹரி மரணம் அடைந்தார். அதன்பிறகு குடும்ப பொறுப்புகளை டிஸ்கோ சாந்தி கவனித்து வந்தார்.
இந்த நிலையில் தெலுங்கு சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள டிஸ்கோ சாந்தி தான் தற்போது வருமானம் இன்றி வாழ்ந்து வருவதாகவும், இரண்டு வீடுகளை வாடகைக்கு விட்டு அந்த பணத்தில் வாழ்ந்து வருவதாகவும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: எனது கணவர் உயிரோடு இருந்தபோது நிறைய பேருக்கு பணம் கொடுத்திருந்தார். அவர் இறந்த பிறகு நாங்கள் பணம் கொடுக்க வேண்டியவர்கள் மட்டுமே என் வீட்டிற்கு வந்தார்கள். எங்களுக்கு பணம் தர வேண்டியவர்கள் யாரும் வீட்டு பக்கம் கூட எட்டிப் பார்க்கவில்லை. எங்களிடம் இருந்த நகை, கார், நிலம் எல்லாவற்றையும் விற்று கடனை அடைத்து விட்டோம். ஒரு காருக்கு தவணை கட்ட முடியாமல் வங்கி திருப்பி எடுத்துக் கொண்டது.
இப்போது என்னிடம் அவர் கட்டிய தாலி மட்டுமே மிச்சம் இருக்கிறது. இரண்டு வீடுகள் உள்ளன அந்த வீட்டு வாடகையை வைத்து காலத்தை ஓட்டுகிறோம். சினிமா துறையில் இருந்து யாரும் எங்களை உயிரோடு இருக்கிறோமா இல்லையா என்று கூட எட்டிப் பார்க்கவில்லை. என்று கூறியுள்ளார்.
டிஸ்கோ சாந்தியின் தங்கை லலிதாகுமாரியும் நடிகை என்பதும், அவர் பிரகாஷ்ராஜின் முன்னாள் மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது.