ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
ஈரோடு: கடம்பூர், குன்றி மலைவாழ் மக்களின், மருத்துவ தேவைகளுக்காக ஆம்புலன்ஸ் வாகனத்தை, நகைச்சுவை நடிகர் பாலா, தனது சொந்த நிதியில் வழங்கியுள்ளார். ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில், வாகனத்தின் சேவை துவக்க விழா நேற்று நடந்தது. எஸ்.பி., ஜவகர் சேவையை துவக்கி வைத்தார்.
இதை தொடர்ந்து நடிகர் பாலா கூறியதாவது : கடம்பூர் மற்றும் குன்றியை சுற்றியுள்ள, 12 கிராமங்களில், 8,௦௦௦ மக்கள் வசித்து வருகின்றனர். பாம்பு, வன விலங்குகளால் பாதிப்பு ஏற்பட்டாலோ, உடல் நலன் பாதிப்பு ஏற்பட்டாலோ, 16 கி.மீ., துாரத்தில் இருந்து ஆம்புலன்ஸ் வரவேண்டும். இதையறிந்த நான், இவர்களுக்கு ஆம்புலன்ஸ் வாகனம் வாங்கித்தர எண்ணினேன்.
இதற்காக யாரிடமும் பணம் வாங்காமல், பல்வேறு நிகழ்ச்சிகளில் எனக்கு கிடைத்த பணத்தை சேர்த்து வாங்கி கொடுத்தேன். இது நான் வாங்கி கொடுத்த இரண்டாவது ஆம்புலன்ஸ் வாகனமாகும். இதேபோல் ஆம்புலன்ஸ் வசதியில்லாத குக்கிராமங்கள் மற்றும் மலைக்கிராம மக்களுக்கு, 10 ஆம்புலன்ஸூகளை எனது சொந்த நிதியில் வாங்கித்தர முடிவு செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
இன்றைக்கு கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் கூட செய்யாத பல நல்ல விஷயங்களை பாலா செய்து வருகிறார். இத்தனைக்கும் இவர் சாதாரண குடும்பத்தில் பிறந்து தனது சுய முன்னேற்றத்தால் உயர்ந்தவர். தனக்கு கிடைக்கும் வருவாயை கொண்டு இந்த உதவிகளை செய்து வருகிறார். விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சிகளில் அசத்தி வரும் பாலா, 20க்கும் மேற்பட்ட குழந்தைகளை படிக்க வைத்து வருவதும் இங்கே குறிப்பிடத்தக்கது.