தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு |
தமிழ் சினிமாவில் ஒரு நடிகையாக நீண்டகாலம் நிலைத்திருப்பது சாதாரண விஷயமல்ல. எத்தனையோ போட்டிகள், சில வரையறைகள் என அனைத்தையும் கடந்து 45 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு தனி இடத்தில் நிலைத்திருப்பவர் நடிகை ராதிகா.
அவர் கதாநாயகியாக அறிமுகமான 'கிழக்கே போகும் ரயில்' படம் வெளிவந்து நேற்றுடன் 45 வருடங்கள் முடிந்துவிட்டது. அப்படத்தில் அறிமுகமான போது படத்தில் உதவி இயக்குனராக வேலை செய்த பாக்யராஜ் உள்ளிட்ட பலரும் ராதிகாவைக் கிண்டல் செய்தனர். கதாநாயகி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற ஒரு இலக்கணத்தை உடைத்து வந்தவர் ராதிகா.
தொடர்ந்து பல படங்கள், பல நடிகர்கள், விதவிதமான கதாபாத்திரங்கள் என கதாநாயகியாகவே பல வருடங்களைக் கடந்தவர். அதன்பின் குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தும் தனி முத்திரை பதித்தவர். இப்போது கூட அவரைத் தங்கள் படங்களில் நடிக்க வைத்தால் ஒரு அழுத்தமான பதிவாக இருக்கும் என நினைக்கும் ரசிகர்களும் உண்டு.
சினிமாவில் மட்டுமல்ல சின்னத் திரையிலும் பல சாதனைகளைப் படைத்த ராதிகாவின் 45 வருடத் திரையலகப் பயணத்தை நேற்று சினிமா உலகினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து கொண்டாடினர். தற்போது 'ரிவால்வர் ரீட்டா' படத்தில் நடித்து வரும் ராதிகாவிற்கு படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி வாழ்த்தினர். கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டவர்கள் அதில் கலந்து கொண்டனர்.
ராதிகாவின் கணவரும் நடிகருமான சரத்குமார் ஒரு வீடியோ பதிவையும் வெளியிட்டு நீளமான வாழ்த்துப் பதிவிட்டுள்ளார்.