நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‛ஜெயிலர்' படம் நேற்று(ஆக., 10) உலகமெங்கும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. படம் வெளியாவதற்கு முதல்நாள் ரஜினி, இமயமலை பயணத்திற்காக புறப்பட்டு சென்றார். சென்னையிலிருந்து பெங்களூரு சென்ற ரஜினி அங்கிருந்து தனது நண்பர்களுடன் இமயமலை புறப்பட்டார்.

இந்த பயணத்தின் முதல்நாளில் உத்தரகண்ட் மாநிலம், ரிஷிகேஷ் சென்றார் ரஜினி. சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்கு சென்றவர் அங்குள்ள துறவிகளை சந்தித்து அவர்களிடம் ஆசி பெற்றார். அவர்களின் சொற்பொழிவையும் கேட்டு மகிழ்ந்தார். அவரும் சொற்பொழிவு ஆற்றினார். பின்னர் அவர்களுக்கு உணவு அளித்தார். ரிஷிகேஷில் உள்ள சில கோயில்களுக்கும் சென்று வழிபட்டார். இதுதொடர்பான போட்டோக்கள், வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலானது.