தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | எந்த விதி மீறலும் இல்லை : தனுஷ் நோட்டீஸிற்கு நயன்தாரா பதில் | மீனாட்சி சவுத்ரி எடுத்த முடிவு | குடும்பமே இணைந்து தயாரிக்கும் 'பேமிலி படம்' | 'விடாமுயற்சி' டீசர்: அஜித் ரசிகர்களை மகிழ வைத்த மகிழ் திருமேனி | விஜய் ஆண்டனி குடும்பத்தில் இருந்து வரும் வாரிசு நடிகர் | மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி கேரள தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்ட துல்கர் நண்பரின் படம் | யோகி பாபு நடிக்கும் ‛பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே' |
கடந்த 2014ல் ரஜினிகாந்த் நடிப்பில் கோச்சடையான் என்கிற திரைப்படம் வெளியானது. ரஜினியின் இளைய மகளான சவுந்தர்யா இயக்கிய இந்த படம் முழுக்க முழுக்க அனிமேஷன் முறையில் உருவாக்கப்பட்டது. தீபிகா படுகோனே, சரத்குமார், ஜாக்கி ஷெராப், ஆதி பினிஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்தார். படம் வெளியான பின்பு வியாபராம் தொடர்பான சில கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள் எழுந்து, அதன் பிறகு அமுங்குவது வாடிக்கையாக இருந்தது.
இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான முரளி மனோகர் இந்த படத்தின் அனிமேஷன் பணிகளை கவனித்த நிறுவனத்திற்கு பட உரிமையில் 20 சதவீதமும், 12 சதவீத கமிஷன் தொகையும் அளிப்பதாக கூறி 5 கோடி ரூபாய்க்கான காசோலையை 2014ல் வழங்கி உள்ளார். ஆனால் அப்படி அளிக்கப்பட்ட காசோலையை வங்கியில் செலுத்திய போது பணம் இல்லை என திரும்பியது. இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிறுவனம், முரளி மனோகர் மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்தது. தற்போது இந்த வழக்கில் முரளி மனோகருக்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது கீழமை நீதிமன்றம்.