விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் |
வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், விஜய், ராஷ்மிகா, சரத்குமார் மற்றும் பலர் நடித்து இந்த வருட பொங்கலுக்கு வெளிவந்த 'வாரிசு' படத்தின் தயாரிப்பாளரான தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த தில் ராஜு, தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதற்காக நடைபெற்ற தேர்தலில் அவரை எதிர்த்து போட்டியிட்ட தயாரிப்பாளர் கல்யாணை விட 17 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். தில் ராஜுவுக்கு 48 வாக்குகளும், கல்யாணுக்கு 31 வாக்குகளும் கிடைத்தன. அவரது அணியைச் சேர்ந்தவர்கள் நிர்வாகக் குழு, தியேட்டர் ஓனர்கள், வினியோகஸ்தர்கள், ஸ்டுடியோ, தயாரிப்பாளர்கள் ஆகியவற்றில் மெஜாரிட்டியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். 1600 உறுப்பினர்களில் 1339 பேர் வாக்களித்துள்ளனர்.
தெலங்கானாவிலிருந்து மக்களவை உறுப்பினராக தேர்வாக வாய்ப்புகள் இருந்தும் அரசியலை விடுத்து, திரைப்பட சங்கத்தில் பணியாற்ற விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். 'வாரிசு' படம் வெளிவந்த போது அவருக்கு தெலுங்குத் திரையுலகத்தில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. நேரடித் தெலுங்குப் படத்தை விடவும், அவர் தயாரித்த தமிழ்ப் படத்தின் தெலுங்கு டப்பிங்கான 'வாரசுடு' படத்தை அதிக தியேட்டர்களில் வெளியிட முயன்றார், நேரடி தெலுங்குப் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காமல் செய்தார் என குற்றம் சாட்டியிருந்தார்கள்.