மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசும் போது ரசிகர்களுக்கு அறிவுரை சொல்லி, வழக்கம் போல ஒரு கதையைச் சொன்னார்.
“குரைக்காத நாயும் இல்லை, குறை சொல்லாத வாயும் இல்லை, நம்ம வேலைய பார்த்துட்டு போய்க்கிட்டே இருக்கணும்,” என்றும், அவர் சொன்ன கதையில் “கழுகைப் பார்த்து காக்கா சீண்டிக்கிட்டே இருக்கும். கழுகப் பார்த்து, காக்காவும் உயரமா பறக்க நினைக்கும், ஆனா கழுகு எப்பவுமே அமைதியா இருக்கும், காக்காவாலா உயரமா பறக்கவும் முடியாது,” என்றார்.
ரஜினிகாந்தின் இந்தப் பேச்சு சமூக வலைத்தளங்களிலும் சர்ச்சையை ஏற்படுத்தி பரபரப்பாகி உள்ளது. கடந்த சில வருடங்களாகவே ரஜினிகாந்தின் 'சூப்பர் ஸ்டார்' பட்டத்தின் மீது இன்றைய முன்னணி நடிகர்கள் சிலருக்கு ஆசை வந்தது. அடுத்த சூப்பர் ஸ்டார் தாங்கள்தான் என்ற ரீதியில் அவர்களது பேச்சுக்களும், சுற்றியிருந்தவர்களின் பேச்சுக்களும் இருந்தது.
இந்நிலையில் இந்த வருடப் பொங்கலுக்கு விஜய் நடித்து வெளிவந்த 'வாரிசு' படத்தின் நிகழ்வு ஒன்றில் விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என நடிகர் சரத்குமார் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதிலிருந்தே ரஜினி ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி சண்டை நடந்து வந்தது.
'ஜெயிலர்' படத்தின் பாடல்களிலும் தன்னை எதிர்ப்பவர்களின் எண்ணங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாடல் வரிகள் உள்ளதும் இந்த விவகாரத்தைத் தற்போது பெரிதாக்கி இருந்தது. நேற்று நடந்த 'ஜெயிலர்' விழாவில் ரஜினிகாந்த் பேசிய 'குரைக்கும் நாய், சீண்டும் காக்க' ஆகியவை இந்த சர்ச்சையை மேலும் பற்ற வைத்துள்ளது.
யாருடைய பெயரையும் குறிப்பிட்டு ரஜினி பேசவில்லை என்றாலும் அவர் விஜய் பற்றித்தான் அப்படிப் பேசினார் என சமூக வலைத்தளங்களில் தற்போது கடும் சண்டை நடந்து வருகிறது. கூடவே, ரஜினியை விமர்சித்து கமல்ஹாசன் ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
'ஜெயிலர்' படம் இன்னும் பத்து நாட்களில் வெளியாக உள்ள நிலையில் இப்படிப்பட்ட பேச்சுக்கள், சண்டைகள், சர்ச்சைகள் என வெளிவந்து படத்திற்கு இலவச 'பப்ளிசிட்டி'யைக் கொடுத்துவிடும்.