வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
தெலுங்கில் சாய் ராஜேஷ் இயக்கத்தில், ஆனந்த் தேவரகொண்டா, விராஜ் அஷ்வின், வைஷ்ணவி சைதன்யா மற்றும் பலர் நடிக்க இரண்டு வாரங்களுக்கு முன்பு ஜுலை 14ம் தேதி வெளிவந்த படம் 'பேபி'. சுமார் 10 கோடி ரூபாய் செலவில் தயாரான இந்தப் படம் 70 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதாக டோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
குடிசைப் பகுதியில் வாழும் ஆனந்த், வைஷ்ணவி இருவரும் பள்ளியில் படித்த காலத்திலிருந்தே காதலிக்கிறார்கள். ஆனந்த் பெயில் ஆகிப் போனதால் ஆட்டோ ஓட்ட ஆரம்பிக்கிறார். வைஷ்ணவி கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆரம்பிக்கிறார். கல்லூரி வாழ்க்கையில் வைஷ்ணவிக்கு விராஜ் என்ற புதிய நண்பர் கிடைக்கிறார். அதன்பிறகு மூவரது வாழ்க்கையிலும் பெரும் திருப்பம் ஏற்படுகிறது. அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் இப்படத்தின் கதை.
இந்தப் படத்தின் தமிழ், ஹிந்தி ரீமேக் உரிமையை வாங்க தற்போது கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாம். உரிமையை விற்றுவிடலாமா அல்லது அந்த மொழிகளில் தாங்களே தயாரிக்கலாமா என தெலுங்கு படத்தைத் தயாரித்துள்ள நிறுவனம் யோசித்துக் கொண்டிருக்கிறதாம்.