'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை | பிளாஷ்பேக் : மம்முட்டி கேரக்டரில் நடித்த சிவகுமார் | பிளாஷ்பேக் : வாய்ப்புக்காக பிச்சைக்காரர் தோற்றத்திற்கு மாறிய ஜெமினி கணேசன் | இந்த வாரமும் ஐந்திற்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் | காந்தாரா பாணியில் உருவாகும் 'கரிகாடன்' | அனுமனை இழிவுபடுத்தி விட்டார் : ராஜமவுலி மீது போலீசில் புகார் | என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை |

பிரபல ஹாலிவுட் நடிகை மற்றும் பாடகி டோரி கெல்லி. சிங், சிங் 2, ஜெர்ரி அண்ட் மெர்ஜ் கோ லார்ஜ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஏராளமான தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். பாடல் ஆல்பங்களுக்காக 3 முறை கிராமி அவார்ட் வாங்கி உள்ளார். ஜெர்மனி கால்பந்து வீரர் ஆண்ட்ரியோ முரிலோவை 2018ம் ஆண்டு திருமணம் செய்தார்.
30 வயதான டோரி கெல்லி, லாஸ் ஏஞ்சல்ஸ் டவுன் டவுனில் உள்ள ஓட்டலில் நண்பர்களுடன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், தற்போது சுயநினைவை இழந்துள்ளதாகவும், அவரது முக்கிய உறுப்புக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபட்டுள்ளதாகவும், மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சம்பவம் ஹாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைத்தளங்களில் டோரி கெல்லியின் ரசிகர்கள் அவருக்காக பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.