2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் |

உலகமே எதிர்பார்த்து காத்திருந்த கிறிஸ்டோபர் நோலனின் 'ஓப்பன்ஹெய்மர்' படம் கடந்த வாரம் வெளியானது. படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதும் வசூலை குவித்து வருகிறது. இந்த படம் அணுகுண்டை கண்டுபிடித்த விஞ்ஞானி ஓப்பன்ஹெய்மர் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டது. ஓப்பன்ஹெய்மர் சமஸ்கிருத மொழியை விரும்பி படித்தார், குறிப்பாக பகவத் கீதை அவருக்கு பிடித்த ஒன்றாக இருந்தது என்று அவரது வரலாற்றில் இடம் பெற்றுள்ளது.
இதனை வில்லங்கமாக காட்சிபடுத்தியுள்ளார் கிறிஸ்டோபர் நோலன். ஓப்பன்ஹெய்மரும், அவரது தோழியும் பாலுறவு கொள்ளும்போது பகவத் கீதையில் உள்ள ஸ்லோகங்கள் பற்றி விவாவதிப்பது போன்று காட்சி உள்ளது. இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது. குறிப்பிட்ட அந்த காட்சியை நீக்க வேண்டும் என்று இந்திய தணிக்கை குழுவிற்கு வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட அக்காட்சிகளை உடனே நீக்க வேண்டும் என்று, சென்சார் போர்டுக்கு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் உத்தரவிட்டுள்ளதாகவும், இக்காட்சிகளுக்கு ஒப்புதல் அளித்த சென்சார் போர்டு உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.