பாலிவுட்டில் அறிமுகமாகும் மீனாட்சி சவுத்ரி | லோகா படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு | 'ஓஜி' வரவேற்பு : ஸ்ரேயா ரெட்டி மகிழ்ச்சி | குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலில் தரிசனம் செய்த தனுஷ் | துபாயில் சொகுசு கப்பலா... : மாதவன் கொடுத்த விளக்கம் | அருண் விஜய் படத்திற்கு முதல் விமர்சனம் தந்த தனுஷ் | சரஸ்வதி படத்தின் மூலம் இயக்குனர் ஆகும் நடிகை வரலட்சுமி | சாந்தனுவின் ஏக்கம் தீருமா | 'கந்தாரா சாப்டர் 1' போட்டியை சமாளிக்குமா 'இட்லி கடை' | ஹிந்தி பிக்பாஸ் சீசன் 19 நிகழ்ச்சியின் மீது 2 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு |
மலையாளத்தில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு வெளியான படம் ‛ஒரு அடார் லவ்'. பள்ளி மாணவர்களின் காதலை மையப்படுத்தி உருவான இந்தப்படம் தமிழிலும் கூட வெளியானது. புருவ அழகி என அந்த சமயத்தில் ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்ட பிரியா பிரகாஷ் வாரியர் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். அதேசமயம் அந்த படத்தில் இன்னொரு கதாநாயகியாக நடித்திருந்தவர் தான் நூரின் ஷெரீப். இவருக்கும் அந்த படத்தின் மூலம் நிறைய ரசிகர்கள் கிடைத்தார்கள். சொல்லப்போனால் பிரியா வாரியரை விட மலையாளத்தில் இவருக்குத்தான் சில பட வாய்ப்புகள் கிடைத்து. பதினெட்டாம்படி, வெல்லப்பம், பெர்முடா ஆகிய படங்களில் நடித்தார்.
கடந்த டிசம்பர் மாதம் இவருடன் நடித்த சக நடிகரும் கதாசிரியருமான பாஹிம் ஷபா என்பவருடன் நூரின் ஷெரீப்புக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிலையில் இவர்களது திருமணம் தற்போது இனிதே நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வில் ஒரு அடார் லவ் படத்தின் இன்னொரு கதாநாயகியும் புருவ அழகி என பெயர் பெற்றவருமான பிரியா பிரகாஷ் வாரியர் மற்றும் நடிகைகள் ரஜிஷா விஜயன், ஆஹானா கிருஷ்ணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.