குட் பேட் அக்லி ஓடிடி வெளியாகும் தேதி | வெளிவரும் முன்பே வெற்றிக்கு வழிவகுத்த "கேங்கர்ஸ்" | திரைப்பட விழாவில் 'சந்தோஷ்': மத்திய அரசு அனுமதிக்குமா? | சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? |
ரஜினிகாந்த் நடிக்கும் படங்களின் டைட்டில்களுக்கு பெரும்பாலும் எந்தவித சிக்கலும் வந்ததில்லை. தற்போது முதன்முறையாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள ஜெயிலர் படத்திற்கு எதிர்பாராத விதமாக கேரளாவில் இருந்து ஒரு சர்ச்சை கிளம்பி உள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாக இருக்கிறது. எல்லா மொழிக்கும் ஏற்ற டைட்டில் என்பதால் இதே பெயரிலேயே அனைத்து மொழிகளிலும் வெளியாகிறது.
அதேசமயம் மலையாளத்தில் ஜெயிலர் என்கிற பெயரில் ஏற்கனவே ஒரு படம் மலையாளத்தில் உருவாகி வந்துள்ளது. ஷகீர் மாடத்தில் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் வினீத் சீனிவாசனின் தம்பி தயன் சீனிவாசன் கதாநாயகனாக நடித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் இயக்குனர் மலையாளத்தில் வெளியாகும் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்திற்கு வேறு டைட்டில் மாற்றி வைக்கும்படி வேண்டுகோள் வைத்திருந்தார். ஆனால் ரஜினிகாந்த் படம் என்பதால் அப்படி ஒரு மொழிக்கு மட்டும் டைட்டிலை மாற்ற தயாரிப்பு நிறுவனம் தயாராக இல்லை.
இதனை தொடர்ந்து ஜெயிலர் வெளியாகும் அதேநாளில் மலையாளத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படமும் ரிலீஸ் ஆக இருக்கிறது என்று தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஒருவேளை இந்த டைட்டில் சர்ச்சையை தங்களது படத்திற்கு புரமோஷன் ஆக மலையாள ஜெயிலர் படக்குழுவினர் பயன்படுத்துகிறார்களோ என்றும் சொல்லப்படுகிறது. இறுதி நேரத்தில் மலையாள ஜெயிலர் ரிலீஸில் மாற்றம் நிகழவும் வாய்ப்பு உண்டு என்கிறார்கள்.