முதல்முறையாக ஜோடி சேரும் நானி, பூஜா ஹெக்டே | வெங்கடேஷ் ஜோடியான கே.ஜி.எப் நாயகி! | பிப்ரவரி மாதத்தை குறிவைக்கும் இரண்டு வானம் படக்குழு | நவ., 7ல் ‛அதர்ஸ்' படம் ரிலீஸ் | ஓடிடியில் நேரடியாக வெளியான தீபாவளி படம் | பிளாஷ்பேக்: ஸ்ரீதேவி தான் வேண்டும் என்று அடம்பிடித்த ரஜினி | பிளாஷ்பேக் : 'மனோகரா' கதை ஷேக்ஸ்பியர் எழுதியது | ஒரே நேரத்தில் இரு லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படமா? | சூப்பர் மாரி சூப்பர் : ‛பைசன்' படத்திற்கு ரஜினி பாராட்டு | ‛பரிசு' : லட்சியத்திற்காக போராடும் பெண்ணின் கதை |
பி.வாசு இயக்கியுள்ள 65வது படம் சந்திரமுகி -2. இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், வடிவேலு, லட்சுமிமேனன், மகிமா நம்பியார் உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க, எம்.எம். கீரவாணி இசை அமைக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது, லாரன்ஸ் டப்பிங் பேசியதை அடுத்து மற்ற நடிகர் நடிகைகளும் டப்பிங் பேசி வருகிறார்கள். இப்படத்தின் பின்னணி இசைப்பணிகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் இசை விழா பிரமாண்டமாக நடைபெற உள்ளது. அதோடு, இந்த சந்திரமுகி- 2 படத்தின் முதல்பாடல் அடுத்த மாதம் வெளியாக இருப்பதாக படக்குழு ஒரு தகவல் வெளியிட்டுள்ளது.