'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் | பிளாஷ்பேக்: தாமதத்தால் ஏற்பட்ட 4 பெரும் இழப்புகள் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் 'அடங்காதே' |
நடிகர் அர்ஜுன் தற்போது தனது செகண்ட் இன்னிங்ஸில் கதாநாயகனுக்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்த, வில்லனாகவோ அல்லது குணச்சித்திர கதாபாத்திரங்களிலோ தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாள மொழிகளிலும் கவனம் செலுத்தி நடித்து வரும் அர்ஜுன் சில வருடங்களுக்கு முன்பு திலீப் நடித்த ஜாக் டேனியல் என்கிற படத்தின் மூலம் மலையாளத்தில் அடி எடுத்து வைத்தார். அதைத் தொடர்ந்து கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மோகன்லாலுடன் இணைந்து மரைக்கார் என்கிற பிரம்மாண்ட வரலாற்று படத்தில் நடித்திருந்தார்.
இப்போது மலையாளத்திலேயே விருன்னு என்கிற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் அர்ஜுன். இதில் கதாநாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். ஆக்ஷன் படங்களை இயக்குவதற்கு பெயர் பெற்ற இயக்குனர் கண்ணன் தாமரைக்குளம் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.