ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு | ரத்தத்தால் அடா சர்மாவின் ஓவியம் வரைந்த ரசிகர் |
பரத் நடித்துள்ள 50வது படம் 'லவ்'. மலையாள இயக்குர் ஆர்.பி.பாலா மலையாளத்தில் தான் இயக்கிய படத்தை அதே பெயரில் தமிழில் ரீமேக் செய்துள்ளார். வாணி போஜன் நாயகியாக நடித்திருக்கிறார். வருகிற 28ம் தேதி படம் வெளிவருகிறது. படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. விழாவில் பரத்தின் 50வது படம் என்பதால் அவருக்கு ஆளுயர ரோஜா மாலை அணிவிக்கப்பட்டது.
பின்னர் இந்த நிகழ்ச்சியில் பரத் பேசியதாவது: இங்கு எனது 50 வது படத்தில் உங்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடியது மகிழ்ச்சி. என் திரை வரலாற்றில் மோசமான படங்கள் செய்த போதும், நீ நல்லா பண்ணியிருக்க, நல்லா பண்ணு, நல்லா வருவ என எனக்குத் தொடர்ந்து ஊக்கம் தந்து வரும் உங்களுக்கு நன்றி. இந்தப் பயணம் மிகப்பெரியது. ஷங்கர் சார், ஏ.எம்.ரத்னம் சாருக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
படம் செய்யும் போது மிக உற்சாகத்துடன் வேலை பார்க்கிறோம். ஆனால் படம் ரிலீஸ் என வரும் போது பெரும் பிரச்சனைகள் வந்து நிற்கிறது, மன உளைச்சல் தருகிறது. சினிமா இரண்டாகப் பிரிந்து போயிருக்கிறது. ஆனால் நான் எப்போதும் என் வேலையை சிறப்பாக செய்து வருகிறேன், அது தான் முக்கியம். இந்தப் படம் எங்கேயும் உங்களுக்கு போரடிக்காது, ஒரு சிறப்பான படம் பார்க்கும் அனுபவம் தரும்.
இவ்வாறு அவர் பேசினார்.