புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
கடந்த 2016ம் ஆண்டில் ராம்பாலா இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடித்து வெளிவந்த திரைப்படம் தில்லுக்கு துட்டு. ஹாரர் கலந்த காமெடி படமாக வெளிவந்த இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் நடித்து கடந்த 2019ம் ஆண்டில் தில்லுக்கு துட்டு 2ம் பாகம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
இந்த படத்தின் மூன்றாம் பாகத்தை சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தனர். இதற்கு டிடி ரிட்டர்ன்ஸ் என தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தை ராம்பாலாவின் உதவி இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்குகிறார். இதில் சந்தானம், சுரபி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு இன்று வெளியாகும் என நேற்றே தெரிவித்தனர். அதன்படி, இந்த படத்தை வருகின்ற ஜூலை 28ம் தேதி உலகமெங்கும் வெளியாகும் என அறிவித்துள்ளனர். கூடுதலாக, இந்த படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.