விஜய் டிவி பிரியங்கா 2வது திருமணம் : மாப்பிள்ளை யார் தெரியுமா...! | பாலோயர்ஸ்: உண்மையைப் பேசியுள்ள பூஜா ஹெக்டே | ரீ-ரிலீஸில் வரவேற்பைப் பெறுமா 'சச்சின்' | நஷ்டஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ்: 'குட் பேட் அக்லி' தயாரிப்பாளர் விளக்கம் | ஓடிடி.,யிலும் தோல்வியடைந்த யுவன் ஷங்கர் ராஜா படம் | ஓடிடி-யில் வெளியாகும் வரலக்ஷ்மி சரத்குமாரின் திரில்லர் படம் | கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு |
'பாகுபலி, ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்களின் மூலம் இந்தியத் திரையுலகத்தை மட்டுமல்லாமல் ஹாலிவுட் திரையுலகத்தையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் ராஜமவுலி. தனது கனவுப் படைப்பாக 'மகாபாரதம்' காவியத்தைத் திரைப்படமாக்க வேண்டும் என அவரது சில பேட்டிகளில் கூட இதற்கு முன்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ராஜமவுலியின் அப்பாவும் 'பாகுபலி, ஆர்ஆர்ஆர்' படங்களின் எழுத்தாளருமான விஜயேந்திர பிரசாத், 'மகாபாரதம்' படம் பற்றிய அப்டேட் ஒன்றைக் கொடுத்துள்ளார்.
ராஜமவுலி அடுத்ததாக மகேஷ் பாபு கதாநாயகனாக நடிக்க உள்ள படத்தை இயக்கவிருக்கிறார். 2024ம் ஆண்டு ஆரம்பமாக உள்ள அப்படம் 2025ல் வெளியாகுமாம். அது வெளிவந்தபின் உடனடியாக ராஜமவுலி 'மகாபாரதம்' படத்தை இயக்க ஆரம்பிப்பார் எனக் கூறியுள்ளார்.
'மகாபாரதம்' படத்தை ஹாலிவுட் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் இணைந்து உருவாக்க ராஜமவுலி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தியத் திரையுலகின் முக்கிய நடிகர்களை படத்தில் நடிக்க வைக்க உள்ளாராம். இரண்டு அல்லது மூன்று பாகங்களாக அப்படம் உருவாகலாம்.