ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
தமிழ் சினிமாவின் சமீபத்திய நடிகர்களில் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் போன்றவர்கள் எந்தவித பின்புலமும் இல்லாமல் தன்னிச்சையாக போராடி வெற்றி பெற்றவர்கள். இவர்களில் விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். அதோடு ஹீரோ மட்டுமின்றி வில்லன் வேடங்களிலும் நடிப்பவர், சில படங்களில் வாய்ஸ் ஓவரும் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் படத்திலும் அவர் வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. அதில் அரசியல்வாதிகளை பார்த்து பயந்த நிலையில் இருக்கும் சிவகார்த்திகேயன், அடிக்கடி வானத்தை பார்க்கிறார். அப்போது அங்கிருந்து ஒரு குரல் கேட்கிறது. அது யாருடைய குரல் என்பது தெரியாமல் இருந்து வந்த நிலையில், தற்போது அது விஜய் சேதுபதியின் குரல் என்று ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வரும்போது, அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே அந்த குரலை தற்போதைக்கு சஸ்பென்ஸாக வைத்துள்ளார்களாம்.