குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
தமிழ் திரையுலகில் ஒரு டஜன் படங்கள் இயக்கியவர். அதில், எட்டுக்கும் மேற்பட்ட படங்கள் 'பாக்ஸ் ஆபீஸ்' ஹிட். அதிலும், ஐந்து படங்கள் மனிதர்களின் யதார்த்த வாழ்க்கையை எடுத்துக் காட்டியவை. இதனால், இவருக்கு இன்றும் மக்களிடம் தனி ஈர்ப்பு உள்ளது. அவர்... இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்!
திரைத்துறையில் இயக்குனராக என்ன திறன் வேண்டும்?
அந்த காலத்தில் இயக்குனராக பல தகுதிகள் தேவைப்பட்டது. திரைப்பட கல்லுாரியில் சேர்ந்து பயின்ற பின்னரே, இயக்குனராக முடிந்தது. இன்று அப்படியில்லை. யார் வேண்டுமானாலும் இயக்குனராக வரலாம். எதையும் வித்தியாசமாக யோசிப்பவர்கள் இயக்குனராகலாம். புதிய படைப்புத்திறன் உள்ளவர்கள் இயக்குனராவது எளிது. மொபைல்போன் வைத்துள்ள அனைவரும் இயக்குனர், கேமராமேன்கள் தான். நல்ல கற்பனை இருந்தால் சாதிக்கலாம். குறிப்பிட்ட காலம் வரை மக்கள் ரசிக்கின்றனர். வெற்றிக்களிப்பில், தவறாக படம் எடுக்கும்போது சிக்கல் ஏற்படுகிறது. அந்த தவறை திருத்தத் தெரியாமல் தவிக்கின்றனர்.
ஒரு ஹீரோவுக்கான தகுதி?
ஹீரோவுக்கு என தனித்தகுதி எதுவும் கிடையாது. ஒரு நடிகர் தனக்கு கிடைக்கும் வெற்றி மூலம் வளர்த்துக் கொள்கிறார். நடிப்புத்திறன் இருந்தால் போதும்; வெற்றி பெற்றதும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தால் போதும்.
சமூக வலைதளங்கள் அதிகரிப்பால், திரைத்துறை பின்னடைந்துள்ளதா?
சினிமாத்துறை பின்னடையவில்லை; படைப்புகளே பின்னடைந்துள்ளன. திரைத்துறையை ஒருபோதும் அழிக்க முடியாது. குறும்படங்கள், ஓ.டி.டி., என, பல்வேறு பரிணாமங்கள் வந்துள்ளன. தியேட்டர்களுக்கு சினிமா பார்க்க வருவோர் குறைந்ததற்கு மொபைல்போன் பயன்பாடு அதிகரித்ததே காரணம். வீட்டிலேயே திரைப்படம் பார்க்கும் காலம் வந்து விட்டது; தொழில்நுட்பங்கள் மட்டுமே மாறியுள்ளன. மனித உணர்ச்சி இல்லை என்றால், எந்த தொழில்நுட்பமும் வெற்றி பெறாது. திரைத்துறையில் இன்னும் உணர்ச்சி இருக்கிறது.
எஜமான்-2 எப்போது எதிர்பார்க்கலாம்?
நான் தயாராக இருக்கிறேன். எனக்கு சரியான நபர்கள் கிடைத்தால் எடுக்கலாம்.