பிளாஷ்பேக்: டாக்டர் படிப்பை கைவிட்டு ஆக்டர் ஆன கோட்டா சீனிவாசராவ் | பிளாஷ்பேக்: மெல்லிசை மன்னரின் 10ம் ஆண்டு நினைவு: விருதுகளை கடந்த கலைஞன் | சரோஜாதேவி மறைவு: முதல்வர், திரைப்பிரபலங்கள் இரங்கல் | சிவாஜிகணேசன் - சரோஜா தேவி இணைந்த நடித்த படங்கள் | எம்ஜிஆர் - சரோஜா தேவி இணைந்து நடித்த 26 படங்கள் | சூப்பர் குட் பிலிம்ஸ் 99வது தயாரிப்பில் விஷால் | 'தாமரை நெஞ்சம்' ஒரு படம் போதுமே: பாலசந்தர் அளித்த பதில் | தமிழில் தனது கடைசி படத்தில் நடித்த சரோஜா தேவி | ‛வெள்ளி விழா' படங்களில் முத்திரை பதித்த சரோஜா தேவி : வரிசை கட்டிய விருதுகள் | தனது உயிர் சென்னையில் பிரிய வேண்டும் என்று பேசியிருந்த சரோஜா தேவி |
இந்தியத் திரையுலகத்தில் அதிக பார்வைகளைப் பெற்ற டீசர் என்ற சாதனையை 'கேஜிஎப் 2' டீசர் தன் வசம் வைத்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக அந்த சாதனை இதுவரை முறியடிக்கப்படாமல் இருக்கிறது. 2021 ஜனவரி மாதம் வெளிவந்த அந்த டீசர் இதுவரையிலும் 271 மில்லியன் பார்வைகளைப் பெற்று இந்தியத் திரைப்பட டீசர்களில் முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்து கடந்த வருடம் அக்டோபர் மாதம் வெளியான 'ஆதிபுருஷ்' டீசர் 109 மில்லியன் பார்வைகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.
'கேஜிஎப் 2' படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் அடுத்து இயக்கியுள்ள 'சலார்' படத்தில் பிரபாஸ் நடிப்பதால் அந்த டீசருக்கு மிகப் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. 24 மணி நேரத்தில் அதிக பார்வைகளைப் பெற்ற டீசர் என்ற பெருமையை 'சலார்' டீசர் பெற்றது. தற்போது 105 மில்லியன் பார்வைகளுடன் உள்ள அந்த டீசர் விரைவில் 'ஆதிபுருஷ்' டீசரின் சாதனையான 109 மில்லியன் பார்வைகளைக் கடக்க வாய்ப்புள்ளது. ஆனாலும், 'கேஜிஎப் 2' டீசரின் சாதனையான 271 மில்லியன் சாதனையைக் கடக்குமா என்பது கேள்வியாக உள்ளது.
'கேஜிஎப் 2' டீசர் 200 மில்லியன் பார்வைகளைக் கடக்க ஐந்து மாதங்கள் ஆனது. 2021 ஜனவரியில் வெளியான டீசர் ஜுலை மாதத்தில்தான் அந்த சாதனையைப் புரிந்தது. அதற்கு ஐந்து மாத கால அவகாசம் தேவைப்பட்டது.
பிரசாந்த் நீல், பிரபாஸ் கூட்டணியில் வரும் படம் என்பதாலும், இருவருமே இதற்கு முந்தைய அவர்களது படங்களின் டீசர்களில் சாதனை புரிந்தவர்கள் என்பதாலும் 'சலார்' டீசரும் அந்த சாதனையைப் பெறும் என அவர்களது ரசிகர்கள் இன்னமும் எதிர்பார்க்கிறார்கள்.
'சலார்' படம் செப்டம்பர் மாதம் 28ம் தேதி வெளியாக உள்ளது. வெளியீட்டிற்கு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ள நிலையில் விரைவில் 'சலார்' டிரைலரும் வெளியாக உள்ளது என்கிறார்கள். அதனால், 'கேஜிஎப் 2' டீசரின் சாதனையை முறியடிக்குமா என்பதும் சந்தேகம்தான்.