என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
விக்ரமன் இயக்கத்தில், எஸ்ஏ ராஜ்குமார் இசையமைப்பில், சரத்குமார், தேவயானி, ராதிகா, பிரியா ராமன், மணிவண்ணன், ஆனந்தராஜ் மற்றும் பலர் நடித்து வெளிவந்து பெரும் வெற்றியைப் பெற்ற படம் 'சூர்யவம்சம்'. நேற்றுடன் அப்படம் வெளிவந்து 26 ஆண்டுகள் நிறைவடைந்தது. இன்றைக்கும் அந்தப் படத்தைப் பற்றி ரசிகர்கள் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டு வருகிறார்கள். அந்தப் படத்தை வைத்து பல மீம்ஸ்கள் இன்றைக்கும் வந்து கொண்டிருக்கின்றன. சிலர் படத்தைப் பற்றி இப்போது கிண்டலடித்தாலும் மக்கள் மனதில் இடம் பிடித்த அருமையான சென்டிமென்ட் படம் அது.
நேற்று அப்படம் 26 ஆண்டுகளை நிறைவடைந்ததை முன்னிட்டு படத்தின் கதாநாயகன் சரத்குமார், “கலைத்துறை பயணத்தில், காலங்கள் கடந்தும், தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்தும், இன்றளவும் அனைத்து தரப்பு ரசிகர்களின் சிந்தையிலும் நீங்காமல் நிறைந்திருந்து கொண்டாடக்கூடிய சிறப்புவாய்ந்த குடும்பத் திரைப்படம் சூர்யவம்சம் வெளியாகி இன்றுடன்(நேற்று ஜூன் 27) 26 ஆண்டுகள். கதாபாத்திரங்கள், வசனங்கள், பாடல்கள் என ஒட்டுமொத்த திரைப்படத்தையும் ரசித்து, மாபெரும் வெற்றியளித்து, ஆதரவளித்த அன்பர்களுக்கு நன்றி!
விரைவில் சூர்யவம்சம் - 2!...,” எனப் பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்த போது கூட 'சூர்யவம்சம் 2' விரைவில் உருவாகப் போவதாகக் குறிப்பிட்டிருந்தார். படத்தை யார் இயக்கப் போவது, சரத்குமாருடன் யார், யாரெல்லாம் நடிக்கப் போகிறார்கள் என்பது பற்றிய அறிவிப்புகள் விரைவில் வரலாம்.