காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
பிரபல மலையாள எழுத்தாளர் ஜி.ஆர்.இந்துகோபன் எழுதிய நாவலை தழுவி உருவாகும் படம் 'விளாயத் புத்தா'. ஜெயன் நம்பியார் இயக்குகிறார். கேரளாவில் வாழ்ந்த டபுள் மோகனன் என்ற கடத்தல்காரன் கேரக்டரில் பிருத்விராஜ் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கொச்சியில் உள்ள மறையூர் பகுதியில் நடைபெற்றது. படப்பிடிப்பில் சண்டைகாட்சியில் நடித்தபோது பிருத்விராஜுக்கு காலில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிருத்விராஜ் தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருப்பதாவது: 'விளாயத் புத்தா' படப்பிடிப்பில் ஆக்ஷன் காட்சிகளின்போது விபத்து ஏற்பட்டது. பிரதான அறுவை சிகிச்சைக்குப் பின் தற்போது மீண்டு வருகிறேன். இரண்டு மாதங்களுக்கு ஓய்வு மற்றும் பிசியோதெரபி தான். இந்த நேரத்தை என்னால் முடிந்த அளவுக்கு ஆக்கபூர்வமாக பயன்படுத்த முயற்சிப்பேன். இந்த வலியுடன் போராடி விரைவில் முழுமையாக குணமடைந்து மீண்டு வருவேன் என்று உறுதியளிக்கிறேன். அக்கறை காட்டி அன்பு செலுத்திய அனைவருக்கும் நன்றி. என்று எழுதியுள்ளார்.