பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
'பரியேறும் பெருமாள், கர்ணன்' ஆகிய படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'மாமன்னன்' படம் நாளை(ஜூன் 29) வெளியாகிறது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் மாரி செல்வராஜ், 'தேவர் மகன்' படத்தைப் பற்றியும், அதில் வடிவேலு ஏற்று நடித்த இசக்கி கதாபாத்திரம் பற்றியும் பேசியது பலத்த சர்ச்சைகளை எற்படுத்தியது. அந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கமல்ஹாசன் முன்னிலையிலேயே அவர் அப்படிப் பேசியது கமல் ரசிகர்களை கோபப்படுத்தியது. அதனால், அவர்கள் கடந்த சில தினங்களாக மாரி செல்வராஜை கடுமையாக விமர்சித்து சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்கள்.
மாரி செல்வராஜ், கமல்ஹாசன், தேவர் மகன் என்ற விவாதம் அப்படியே சாதி பிரச்சினையாக, மோதலாக கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இந்தப் படத்தை வெளியிட சில எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது. மதுரை உள்ளிட்ட இடங்களில் படத்திற்கு எதிராக போஸ்டர்களும் ஒட்டப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
தணிக்கையான படத்தை வெளியீட்டிற்கு முன்பாகவே இப்படியிருக்கும், அப்படியிருக்கும் என எதிர்ப்பைக் கிளப்புவது சரியா என மாரி செல்வராஜுக்கு ஆதரவாகவும் குரல் எழுந்தது. இத்தனை சர்ச்சைகளுக்கிடையில் நாளை எந்த போட்டியுமின்றி இப்படம் வெளியாக உள்ளது. வெளியான பின் சர்ச்சைகள் பெரிதாகுமா அல்லது சத்தமில்லாமல் போகுமா என சினிமா வட்டாரங்களும், அரசியல் வட்டாரங்களும் ஒருவித தயக்கத்துடனேயே இருக்கிறார்கள்.