மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், த்ரிஷா மற்றும் பலர் நடிக்கும் 'லியோ' படத்தின் முதல் பாடலான 'நா ரெடி' கடந்த வாரம் யு டியுபில் வெளியானது. இப்பாடல் வெளியீடு பற்றி வெளியான போஸ்டரில் விஜய் சிகரெட் பிடிக்கும் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. அதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தது. பாடல் வெளியான பின் பாடல் முழுவதுமே அவர் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகளும், குடிப்பது பற்றிய வரிகளும் இடம் பெற்றிருப்பதற்கு மேலும் எதிர்ப்புகள் எழுந்தன.
இதனிடையே, அந்தப் பாடலுக்காக விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர் செல்வம் என்பவர் காவல்துறையிடம் புகார் அளித்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இப்போது யு டியூபில் அந்தப் பாடல் வீடியோவில் 'எச்சரிக்கை' வாசங்களைச் சேர்த்துள்ளார்கள். விஜய் சிகரெட் பிடிப்பது போன்று வரும் காட்சிகளில் 'புகை பிடித்தல் புற்றுநோய் உண்டாக்கும், உயிரை கொல்லும்' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. இது போன்ற எச்சரிக்கை வாசகங்களை படத்தில்தான் சேர்க்கச் சொல்வார்கள். யு டியூப் வீடியோக்களுக்கு எந்தவிதமான தணிக்கையும் கிடையாது. இருந்தாலும் பாடலுக்கு எழுந்த எதிர்ப்புகளுக்குப் பணிந்து படக்குழு இப்போது இந்த வாசகங்களை சேர்த்துள்ளது.
ஆனாலும், குடிப்பது பற்றிய வரிகள் இருக்கும் “மில்லி உள்ள போனா கில்லி வெள்ல வருவான்' வரிகளிலோ மன்சூர் அலிகான் கையில் மதுக்கோப்பையை ஏந்தியிருக்கும் காட்சிகளிலோ, “குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும்” என்ற 'எச்சரிக்கை' வாசகங்களை சேர்க்கவில்லை. இப்படி சேர்க்காததற்கு எதிர்ப்பு வந்தால்தான் மீண்டும் சேர்ப்பார்கள் போலிருக்கிறது.