நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஷ்ணு எடவன் எழுதி, விஜய் பாடிய 'லியோ' படத்தின் முதல் சிங்கிளான 'நா ரெடி' பாடல் கடந்த வாரம் ஜுன் 22ம் தேதி யு டியுப் தளத்தில் வெளியானது. பாடல் வெளியாவதற்கு முன்பே சர்ச்சையை கிளப்பி, வெளியான பின்னும் சர்ச்சையுடன் உலா வந்து கொண்டிருக்கிறது இப்பாடல். இருப்பினும் கடந்த நான்கு நாட்களில் இப்பாடல் யு டியுப் தளத்தில் 30 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
24 மணி நேரத்தில் 20 மில்லியன் பார்வைகளைக் கடந்தும், 16 லட்சம் லைக்குகளையும் பெற்ற இப்பாடல் யு டியூப் தளத்தில் இசைப் பிரிவில் தற்போது வரை நம்பர் 1 இடத்தில் உள்ளது. தற்போது 31 மில்லியன் பார்வைகளையும் 19 லட்சம் லைக்குகளையும் கடந்துள்ளது. அது மட்டுமல்லாது ஸ்பாட்டிபை ஒலி தளத்தில் 45 லட்சம் முறையும் கேட்கப்பட்டுள்ளதாம். அதன் ஹாட் ஹிட்ஸ் தமிழ் பட்டியலிலும் 'நா ரெடி' பாடல்தான் முதல் இடத்தில் இருக்கிறதாம்.
யு டியுப் தளத்தைப் பொறுத்தவரையில் விஜய் நடித்து வெளிவந்த 'பீஸ்ட்' படப் பாடலான 'அரபிக் குத்து' பாடல் 510 மில்லியன் பார்வைகளைக் கடந்து அதிகப் பார்வைகளைக் கடந்த தமிழ் சினிமா பாடல்களில் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதற்கடுத்து 'மாஸ்டர்' படத்தின் 'வாத்தி கம்மிங்' 444 மில்லியன் பார்வைகளுடனும், 'வாரிசு' படத்தின் 'ரஞ்சிதமே' 212 மில்லியன், 'மெர்சல்' படத்தின் 'ஆளப் போறான் தமிழன்' 170 மில்லியன், 'பிகில்' படத்தின் 'வெறித்தனம்' 146 மில்லியன், 'தெறி' படத்தின் 'என் ஜீவன்' 143 மில்லியன், 'கத்தி' படத்தின் 'செல்பி புள்ள' 140 மில்லியன், 'தெறி' படத்தின் 'ஈனா மீனா' 138 மில்லியன், 'மாஸ்டர்' படத்தின் 'குட்டி ஸ்டோரி' 118 மில்லியன் பார்வைகளுடனும் உள்ளன.
100 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்ற பாடல்களில் விஜய்யின் பாடல்கள்தான் அதிகம் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.