விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பிய படம் 'தி கேரளா ஸ்டோரி'. கேரளாவில் உள்ள இளம் பெண்கள் முஸ்லிம்களாக மாற்றப்பட்டு அவர்கள் வெளிநாடுகளுக்கு தீவிரவாதிகளாக அனுப்பப்படுகிறார்கள் என்ற கதை அம்சத்துடன் இந்த படம் வெளியாகி இருந்தது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில் படம் வெளியாகவில்லை. சில மாநிலங்கள் படத்திற்கு வரிவிலக்கு அளித்தது.
சுதிப்டோ சென் இயக்கத்தில் அடா சர்மா, யோகிதா, சோனியா பலானி, சித்னி இத்னானி உட்பட பலர் நடித்த படம். படத்திற்கு எதிர்ப்பு, ஆதரவு இருந்தாலும் படம் 240 கோடிக்கு மேல் வசூலித்து சாதனைப் புரிந்தது. தற்போது படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட அதன் தயாரிப்பாளர் முயற்சித்து வருகிறார். ஆனால் படத்தை வாங்க எந்த ஒடிடி தளங்களும் முன்வரவில்லையாம்.
இந்த படத்தை வெளியிட்டால் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த சந்தாதாரர்களை இழக்க வேண்டியது வருமோ என்று தயங்குவதாக தெரிகிறது. பலகோடி செலவில் நடத்தப்படும் ஓடிடி தளங்கள் ஒரு படத்திற்காக தங்கள் முதலீட்டை ரிஸ்கில் விட முன்வராது என்று ஓடிடி தரப்பில் தெரிவித்திருக்கிறார்கள்.