அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
‛பத்து தல' படத்தை அடுத்து ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்கிறார் சிம்பு. இந்த படத்துக்காக சில போர் பயிற்சிகளை பெறுவதற்காக அவர் லண்டன் சென்றிருக்கிறார். மேலும், இந்த படத்தை அடுத்து சிம்பு நடிக்கும் 49வது படத்தை போர் தொழில் படத்தின் இயக்குனர் விக்னேஷ் ராஜ் இயக்குவதாக கூறப்படும் நிலையில், அதன் பிறகு சிம்பு நடிக்கும் ஐம்பதாவது படத்தை மணிரத்னம் இயக்குவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அந்த படத்தையும் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ்தான் தயாரிக்கிறது. இதற்கு முன்பு மணிரத்னம் இயக்கிய செக்கச் சிவந்த வானம் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்த சிம்பு, கமலின் 234வது படத்தை மணிரத்னம் இயக்கி முடித்த பிறகு அவரது இயக்கத்தில் மீண்டும் நடிக்க போகிறார். இது சிம்புவின் 50வது படம் என்பதால் இப்படத்துக்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கிறது.