25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
சமூக வலைத்தளங்களில் நடிகைகள் பதிவிடும் பதிவுகளுக்குத்தான் அதிக லைக்குகள் கிடைப்பது வழக்கம். சில முன்னணி நடிகைகள் எந்த போட்டோக்களைப் பதிவிட்டாலும் குறைந்தது பத்து லட்சம் லைக்குகளாவது கிடைக்கும். ஆனால், ஒரு சில புகைப்படங்களுக்கு மட்டுமே அதைவிட அதிக லைக்குகள் கிடைக்கும்.
ஜுன் 22ம் தேதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு காஷ்மீரில் நடைபெற்ற 'லியோ' படப்பிடிப்பின் போது விஜய்யுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டிருந்தார் நடிகை த்ரிஷா. அந்த புகைப்படத்திற்கு 25 லட்சம் லைக்குகள் கிடைத்துள்ளது. இன்ஸ்டாகிராம் தளத்தில் த்ரிஷாவிற்கு இருப்பது 59 லட்சம் பாலோயர்கள்தான். அதில் பாதியளவு லைக்குகள் வந்திருப்பது ஆச்சரியமான ஒன்று.
த்ரிஷா நடித்த 'பொன்னியின் செல்வன்' படத்திற்கான புரமோஷன் நிகழ்வுகளின் போது விதவிதமான தனது புகைப்படங்கள் பலவற்றைப் பதிவிட்டிருந்தார் த்ரிஷா. ஆனால், அப்புகைப்படங்களில் ஒரு பதிவிற்கு மட்டுமே அதிகபட்சமாக 13 லட்சம் லைக்குகள் கிடைத்தது. அதே சமயம், 'லியோ' படத்திற்கான பூஜை 20 வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற போது விஜய்யுடன் பேசிக் கொண்டிருந்த புகைப்படத்தைப் பதிவிட்டதற்கு 22 லட்சம் லைக்குகள் கிடைத்துள்ளது.
த்ரிஷாவின் தனிப்பட்ட போட்டோக்களுக்குக் கிடைக்காத லைக்குகள் விஜய்யுடன் சேர்ந்து எடுத்த இரண்டு போட்டக்களுக்குக் கிடைக்கக் காரணம் விஜய் ரசிகர்களே. 'லியோ' படத்தில் இருவரும் 15 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.