நடிகர் 'லொள்ளு சபா' ஆண்டனி காலமானார் | டிடி நெக்ஸ்ட் லெவல் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு | மகிழ்ச்சியே வாழ்க்கைக்கு சிறந்த மருந்து : ரகுல் பிரீத் சிங் | ஏப்., 18ல் ரெட்ரோ இசை வெளியீடு | சர்வதேச சினிமா தொழில்நுட்ப கண்காட்சியில் கமல் | எங்களுக்குள்ளும் சண்டை வரும், பிரிவை யோசிக்க வைத்துள்ளது : ரம்பா | ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுத்தது ஏன்? 30 ஆண்டுகள் கழித்து காரணம் சொன்ன ரஜினி | பிளாஷ்பேக்: விஜயகாந்த் படத்தில் தலையிட்ட இலங்கை அரசு | பிளாஷ்பேக்: 'சந்திரலேகா'வை தேடி அலைந்த எழுத்தாளர்கள் | அன்னை இல்லத்தில் எனக்கு எந்த உரிமையும் இல்லை: ராம்குமார் பிரமாண மனு தாக்கல் |
தமிழில் லிங்குசாமி இயக்கத்தில் மாதவன் நடித்த ரன் என்ற படத்தில் அறிமுகமானவர் மீரா ஜாஸ்மின். அதன்பிறகு மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து, மீண்டும் லிங்குசாமி இயக்கிய சண்டக்கோழி என பல படங்களில் நடித்து முன்னணி இடத்தை பிடித்தார். ஒரு கட்டத்தில் துபாய் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டிலான மீரா ஜாஸ்மின், அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றவர், மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்திருக்கிறார்.
தமிழில் அவர் ரீ-என்ட்ரி கொடுத்த விமானம் படம் சமீபத்தில் வெளியான நிலையில், அடுத்தபடியாக சசிகாந்த் இயக்கும் டெஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் மாதவன், சித்தார்த், நயன்தாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். தற்போது படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழில் ரீ என்ட்ரி கொடுப்பதற்கு முன்பே பல கிளாமர் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வந்த மீரா ஜாஸ்மின், தற்போது மீண்டும் தனது அதிரடியான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.