இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
கடந்தாண்டு இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா திருமணம் நடைபெற்ற நிலையில் அவர்களுக்கு வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தது. இந்நிலையில் அவ்வப்போது தனது மகன்களின் புகைப்படத்தை வெளியிட்டு வந்த விக்னேஷ் சிவன் சமீபத்தில் தங்களது முதல் திருமணநாளை குழந்தைகளுடன் கொண்டாடிய போட்டோவை பகிர்ந்து இருந்தார்.
இந்நிலையில் நேற்று அவர் தனது மகன்களுடன் தந்தையர் தினத்தை கொண்டாடி இருக்கிறார். தனது இரண்டு மகன்களையும் இரண்டு கைகளிலும் ஏந்தியபடி அவர்களின் முகத்தை காண்பிக்காமல் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். அதோடு அந்த அரை முழுக்க பலூன்களும், வண்ண விளக்குகளும் ஜொலிக்கிறது. மேலும், வாழ்க்கை என்பது மிகவும் அழகானது. அனைவருக்கும் என்னுடைய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள். அதிகம் புகழப்படாத உண்மையான ஹீரோக்கள் தந்தையர்கள் என்றும் அவர் பதிவிட்டு இருக்கிறார்.
அதேபோல் இயக்குனர் அட்லி - பிரியா தம்பதியினரும் தங்களது மகனுடன் தந்தையர் தினத்தை கொண்டாடி இருக்கிறார்கள். தனது கையில் மகனை ஏந்தியபடி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார் அட்லி.